திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத் தில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட காளி பாளையம் மதுக்கடையை திறக்கக் கோரி, மது அருந்துவோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மதுவுக்கு எதிராகப் போராடியவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம், நேற்று முன்தினம் இரவுடன் முடி வுக்கு வந்தது. மதுக்கடை திறக்கப் படாது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட் டம் முடிவுக்கு வந்தது என்றனர்.
இந்நிலையில், ஆண்கள் சுமார் 80 பேர், மதுக்கடையைத் திறக்க வலியுறுத்தி சாமளாபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுவுக்கு அதிக விலை
அதில், ஜெயராமன் என்பவர் கூறும்போது, “மதுக்கடை மூடப்பட் டது ஏமாற்றத்தை அளிக்கிறது. சுற்றுவட்டாரத்தில் 15 கி.மீ. சுற்றள வுக்கு கடை இல்லை. திடீரென மது அருந்துவதை நிறுத்தவும் முடியவில்லை. இதனால், அதிக விலைக்கு மது வாங்கி அருந்தும் சூழல் ஏற்படும். எனவே, மூடப்பட்ட மதுக்கடையை உடனடியாகத் திறக்க வேண்டும்” என்றார்.
டாஸ்மாக் கடைக்கு விளை நிலத்தை வாடகைக்கு அளித்த பாலசுப்பிரமணி கூறும்போது, “கடையை அடைப்பதால் மது வியாபாரம் நடைபெறாமல் இருக் குமா? இதனால் அதிக விலைக்கு மதுவை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஆட்சியரை சந்தித்து கடையை திறக்கக் கோரி மனு அளித்துள்ளோம்” என்றார்.
அரசின் பிடிவாதப் போக்கு
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமியை நேற்று சந்தித்த அனைத் துக் கட்சியினர் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது: மதுக்கடை களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டிக்கிறோம். 16 பெண்கள் உட்பட 32 பேர் மீது மீண்டும் புதிதாக வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மதுக்கடைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்கு களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தாலி ஒப்படைப்பு
திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துரை, பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, சார் ஆட்சியர் சாந்திதேவி ஆகியோர், மதுக்கடைக்கு எதிராகப் போராடிய மக்களிடம் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காளிபாளையத்தைச் சேர்ந்த வேலுமணி என்ற பெண், தனது தாலியை கழற்றி டாஸ்மாக் மேலாளரிடம் அளித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
No comments:
Post a Comment