Monday 22 May 2017

`எரியும் பனி': புதிய எரிவாயு வளத்தை கண்டுபிடித்ததாக கூறுகிறது சீனா

முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டி போன்ற பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது., எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது விளங்கும் என்று கருதப்படுகிறது..
தீப்பற்றிக் கொள்ளும் பனியில்படத்தின் காப்புரிமைALAMY
இந்த வெற்றியை ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என சீன அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
"எரியும் ஐஸ்" என்று அழைக்கப்படும் மீத்தேன் ஹைடிரேட் பெருமளவு இயற்கை எரிவாயு கொண்ட ஆதாரமாக உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகள் அந்த படிமங்களை எப்படி தோண்டுவது மற்றும் பிரித்தெடுப்பது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
தீப்பற்றக்கூடிய பனி என்றால் என்ன?
நீர் மற்றும் வாயு ஆகியவற்றின் உறைநிலை கலவையே தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பனி. "அது ஒரு பனி துகள்களை போன்று இருக்கும். அதைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நீரின் மூலக்கூறால் மீத்தேன் மூலக்கூறுகள் சூழப்பட்டு கிடப்பதைக் காண முடியும்" என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ரசாயன உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையின் பேராசிரியர் பிரவீன் லிங்கா பிபிசியிடம் தெரிவித்தார்.
மீத்தேன் கிளாத்ரேட்ஸ் அல்லது ஹைடிரேட்ஸ் என்று அழைக்கப்படும் இவை மிகக் குறைவான வெப்பநிலையிலும், அதிக அழுத்தத்தாலும் உருவாகிறது. பெருங்கடலின் அடியில் இருக்கும் படிமங்களிலும், நிலத்திற்கு அடியில் உறை பனிக்கட்டி நிலையிலும் அவை கிடைக்கும்.
குறைந்த வெப்பநிலையிலும் இந்த ஹைடிரேட்டுகள் தீப்பற்றி எரியக்கூடியவை; ஒரு லைட்டரை அதன் அருகில் கொண்டு சென்றால், அதனுள்ளே அடைப்பட்டு இருக்கும் வாயுவானது தீப்பற்றிக் கொள்ளும். ஆகையால் அது "எரியும் பனி" என்றும் "நெருப்புப் பனி" என்றும் அழைக்கப்படுகிறது.
அழுத்தம் அல்லது வெப்பநிலையை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் இந்த ஹைடிரேட்டுகள் நீர் அல்லது அதிகப்படியான மீத்தேனாக உடைகிறது.
ஒரு க்யூபிக் மீட்டர் கலவை, 160 க்யூபிக் மீட்டர் வாயுவை வெளியேற்றுவதால் அது அதிக ஆற்றல் கொண்ட தீவிர எரிபொருளாக மாறுகிறது.
தீப்பற்றிக் கொள்ளும் பனியில்படத்தின் காப்புரிமைUSGS
முக்கியமாக கருதப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த வாயுவை பிரித்தெடுப்பது கடினம்; மேலும் இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.
இந்த மீத்தேன் ஹைட்ரேடுகள் ரஷியாவில் 1960களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடல் வண்டலிலிருந்து வாயுவை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது குறித்த ஆராய்ச்சி 10-15 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இயற்கை எரிவாயு எதுவும் இல்லாத காரணத்தால் இந்த துறையில் ஜப்பான் முதலாவதாக உள்ளது. மேலும் இந்தியா அல்லது தென் கொரியா போன்ற நாடுகளில் சொந்த எண்ணெய் சுரங்கங்கள் இல்லை என்பதால் அவை இதில் முன்னிலை வகிக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளும் இந்த துறையில் அதிக பணிகளை மேற்கொண்டு வருகிறது; மேலும் அலாஸ்கா மற்றும் கனடாவில் உள்ள நிரந்தர பனிக்கு அடியில் இருக்கும் ஹைடிரேடுகளில் அது கவனம் செலுத்தி வருகிறது.
மீத்தேன் ஹைடிரேட்ஸ் எதிர்கால எரிசக்தி தேவையாகவும் - உலகின் கடைசி கார்பன் சார்ந்த எரிப்பொருளாகவும் இருக்கும். உலகம் முழுவதும் பெருங்கடல்களில் பல படிமங்கள் இருக்கின்றன. குறிப்பாக பள்ளமான பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
திருப்புமுனை
இந்த பிரித்தெடுத்தல் முறை பாதுகாப்பாகவும் லாபகரமானதாகவும் இருக்க நாடுகள் போராடி வருகின்றன. சமீபத்திய முடிவை சீனா ஒரு திருப்புமுனையாக பார்க்கிறது என பேராசிரியர் லிங்கா ஒப்புக் கொள்கிறார்.
ஜப்பானின் ஆராய்ச்சியில் கண்ட விளைவுகளை காட்டிலும், அதிக வாயுவை பிரித்தெடுக்க சீன விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே மீத்தேன் ஹைடிரேட்டுகளிலிருந்து வாயுவை பிரித்தெடுப்பதற்கான முக்கிய முயற்சியாக இது கருதப்படுகிறது.
ஷெல் வாயுவைக் காட்டிலும் மீத்தேனில் 10 மடங்கு அதிகமாக எரிவாயு உள்ளது என கூறப்படுகிறது.
சீனா இந்த தீப்பற்றிக் கொள்ளும் பனியை தென் சீனக் கடலில் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசர்ச்சைக்குரிய தென் சீனக்கடல்
சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பின்ஸ் என பரவிக் கிடக்கும் தென் சீனக் கடலை, சமீப வருடங்களாக சீனா உரிமை கொண்டாடி வருவதால் சர்ச்சையில் இருந்து வருகிறது; எனவே இந்த வளங்களும் இந்த சர்ச்சைக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளன.
அடுத்து என்ன?
இது ஒரு திருப்புமுனையாக இருந்த போதிலும், சீனாவின் நீண்ட வெற்றிப்பாதையில் இது ஓர் அடி மட்டுமே.
"உற்பத்தி விகிதம் அதிகப்படியானதாக உள்ள போதிலும் 2025 ஆம் ஆண்டில்தான் வர்த்தக ரீதியான லாபங்களை எதிர்பார்க்க முடியும்" என கூறுகிறார் லிங்கா.
தென் சீன கடலின் சன்குவா பகுதியிலிருந்து தினமும் சராசரியாக 16,000 க்யூபிக் மீட்டர் சுத்தமான வாயுவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீத்தேன் வாயு, புவி வெப்பமயமாதலில் முக்கிய காரணியாக இருப்பதால் இதை மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment