Wednesday 17 May 2017

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி

தற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கணினி, 160 டிபி நினைவகத் திறன் கொண்டது.



160 டிபி நினைவகத் திறன்படத்தின் காப்புரிமைHPE

`தி மெஷின்' என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி, நிலையான மின் தூண்டுதல்கள் மூலம் சிலிக்கான் வழியாக பயணம் செய்வதற்கு பதிலாக, ஒளி அலைகளைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்பும்.
இந்தப் புதிய கணினியின் நினைவகத் திறன், எல்லையில்லா நினைவகத் திறன் படைத்த கணினிகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று ஹெச்பிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிப் எனப்படும் சில்லுகளின் தேவையை நீக்கி, அதி-விரைவாக செயல்படும் திறன் படைத்தது இந்த புதிய கணினி.
அந்த நிலையை ஏற்படுத்த, பழைய தொழில்நுட்பம் பயன்படாது. பெரும் அளவிலான தகவல்களை தன்னகப்படுத்தி வைக்கக் கூடிய திறன் படைத்த கணினிகளை உருவாக்க வேண்டும் என்று ஹெச்பிஇ நிறுவனத்தின் தலைவர் மெக் விட்மேன் தெரிவித்துள்ளார்.
தி மெஷின் என்ற இந்தப் புதிய கணினி, வேகத்திறன் படைத்ததாக இருக்கலாம். ஆனால், பெருமளவிலான தகவல்கள், வேறு சவால்களை ஏற்படுத்தும் என செளத்ஹாம்ப்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லெஸ் கார் பிபிசியிடம் தெரிவித்தார்.
"வேகத்தை அதிகரிக்க, உங்கள் கணினியில் செயலாக்கத்துக்கான எல்லாத் தரவுகளும் இருக்க வேண்டும். வேகத்தை அதிகரிக்க இது இன்னொரு மாற்று வழி" என்றார்.
"வாழ்க்கையில், பல அம்சங்களில், வேகம் மட்டுமன்றி, உள்ளார்ந்த மற்றும் நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அம்சங்கள் மிகவும் அவசியம்" என்றார் அவர்.
இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புதிய கணியை வணிகப்படுத்த முடியும் என்று ஹெச்.பி நம்புகிறது.

No comments:

Post a Comment