தனது உரிமையாளர் ஸ்டெஃபி ஹிஸ்டால் 2013 ஆம் ஆண்டு வீட்டிற்கு அழைத்து வரும் போது பிற பூனைகளின் எடையில் தான் இருந்ததுஒமர்.
ஆனால் தற்போது 120 செ.மீ ( 3அடி 11 இன்ச்) நீளம் இருக்கும் ஒமர், உலகின் நீண்ட பூனையாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த நீண்ட பூனையின் புகைப்படம் இணையத்தில் பரவியதை அடுத்து, கின்னஸ் உலக சாதனை அமைப்பு, தன்னைத் தொடர்பு கொண்டு பூனையின் அளவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கிறார் அதன் உரிமையாளர் ஹிஸ்ட்.
தற்போது 118 செ.மீ உள்ள பூனையே உலகின் நீண்ட பூனையாக உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன், ஒமருக்கான சமூக ஊடக கணக்கை தொடங்கினார் ஹிஸ்ட், அதில் அவர் பகிர்ந்த புகைப்படம் பூனைகளுக்கான இன்ஸ்டாகிராம் கணக்கில் 270,000 முறை பகிரப்பட்டது.
அதிலிருந்து, அந்த சாதுவான பூனை பற்றிய செய்தி முக்கிய ஆஸ்திரேலிய செய்தித்தாள்களிலும், தேசிய தொலைக்காட்சிகளிலும் வந்தது.
இத்தனை கவனத்தை ஒமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; காலையில் அவன் மிகவும் சோர்வடைந்துவிட்டான் என பிபிசியிடம் தெரிவிக்கிறார் ஹிஸ்ட்.
ஒமர் 5 மணிக்கு எழுந்துவிடும், சிற்றுண்டியாக இரண்டு மூன்று தேக்கரண்டி உலர்ந்த பூனை உணவு, வீட்டைச் சுற்றி வரும், புழக்கடையில் விளையாடும், எகிறி குதித்து பயிற்சி செய்ய உதவும். மேசை மீது சிறு தூக்கம், மற்றும் பச்சை கங்காரு கறியை உண்ணும்.
"மனிதர்கள் உண்ணக்கூடிய கங்காரு கறியைத் தான் நாங்கள் வாங்குகிறோம்", அதை மட்டும்தான் ஒமர் உண்ண விரும்புகிறான் என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் ஹிஸ்ட்.
இந்த நீளமான பூனை அதிக குணாதிசயங்களை கொண்டுள்ளது; மேலும் அதன் முடி வீடு முழுவதும் உதிர்கிறது.
14 கிலோ எடையுள்ள ஒமரை தூக்குவது சிரமமாக உள்ளதால், விலங்குகள் நல மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லும் போது நாய்களுக்கான கூண்டை ஹிஸ்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது.
"மெத்தையில் ஒமருக்கு அதிக இடம் தேவைப்படுவதால் அவனை உறங்கும் அறைக்கு வெளியே பூட்ட வேண்டியுள்ளது" என ஹிஸ்ட் கூறுகிறார்.
சமையலறை அலமாரிகள், குளியலறை கதவுகள் மற்றும் துணி அலமாரிகள் என ஒமருக்கு கதவுகளை திறக்கும் திறன் உள்ளது.
எனது அனைத்து நண்பர்களும் எனது புகைப்படத்தை பார்த்து அது போலியா அல்லது இது உண்மையானதாக இருக்க முடியாது என கூறுகின்றனர். பிறகு ஒமரை நேரில் பார்த்ததும் அவர்கள் நம்புகின்றனர்.
கின்னஸ் சாதனைக்கான ஆதாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டால் அங்கிருந்து பதில் வர 12 வாரங்கள் ஆகும்.
ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் ஹிஸ்டின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கவில்லை.
ஒமர் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புவதாகவும், மேசை மீது குட்டித் தூக்கம், கங்காரு கறி, இரவில் எங்களை உறங்கவிடாமல் செய்வது போன்றவற்றை விரும்புவதாகவும் ஒரு வழக்கமான வீட்டுப்பூனையின் வாழ்விற்கு திரும்ப வேண்டும் என்பது தான் ஒமருக்கு மகிழ்ச்சி என்றும் ஹிஸ்ட் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment