குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
குழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது அறிவாற்றல் சோதனைகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த குழு, இந்த கண்டுபிடிப்புகள் ஆரம்பகால தந்தை உறவின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதாக கூறுகிறது.
மூன்று மாதங்களிலிருந்து இந்த அறிகுறிகள் ஆரம்பமாகலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தையின் அறிவாற்றல் மேம்பாட்டிற்கு ஓர் தாயின் கட்டாய ஆதரவு முக்கிய தேவையாகும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஆனால், தற்போது இந்த கட்டுரை தந்தை - குழந்தை குறித்த பரஸ்பர தொடர்பு மற்றும் வளர்ச்சி குறித்ததாகும்.
வடிவங்கள் மற்றும் வண்ணங்களை அங்கீகரித்தல்
ஆராய்ச்சி நோக்கத்திற்காக தரையில் பாய் விரிக்கப்பட்டு, அதன் மீது அப்பாக்கள் தங்களுடைய மூன்று மாத குழந்தைகளுடன் பொம்மைகளின்றி விளையாட வைக்கப்பட்டனர். அது காணொளியாக பதிவு செய்யப்பட்டது. அதன் பின், குழந்தைக்கு 2 வயதான சமயத்தில், ஓர் புத்தக வாசிப்பு அமர்வின் போது மீண்டும் குழந்தைகளுடன் அப்பாக்கள் விளையாட வைக்கப்பட்டனர்.
இரு வெவ்வேறு காலத்தில் எடுக்கப்பட்ட காணொளிகலும் தனி பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்களால் சுயமாக மதிப்பீடு செய்யப்பட்டன. அவர்கள், குழந்தைகளின் அப்பாக்களின் பரஸ்பரத் தன்மையைப் பற்றி மதிப்பீடு செய்தனர்.
இரண்டு வயதான போது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி, வடிவங்கள் மற்றும் வண்ணங்களை கண்டு உணரும் வகையில் அமைந்திருந்த சோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன.
சுமார் 128 அப்பாக்களின் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஆண் அல்லது பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி, குழந்தைகளிடம் அதிகம் நெருக்கமாக இருந்த அப்பாக்கள் அதற்கு ஈடாக குழந்தைகள் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.
ஆனால், குழந்தைகளிடம் அதிகம் விலகி மற்றும் மனம் அழுத்தத்தை வெளிக்காட்டிய அப்பாக்கள், அவர்களுடைய குழந்தைகள் உடனான பரஸ்பர மதிப்பீட்டில் அறிவாற்றல் சோதனைகளில் குறைவான மதிப்பீட்டை பெற்றிருந்தனர்.
குழந்தை மன நல சஞ்சிகையில் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு, ''தொலைத்தூர அப்பாக்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுடன் தொடர்புகொள்ள குறைந்தளவிலான சொற்கள் மற்றும் சொற்களற்ற உத்திகளை பயன்படுத்தினார்கள். இது சமூகத்திலிருந்து குழந்தை கற்று கொள்ளும் அனுபவத்தை குறைக்கிறது'' என்று இறுதியாக கூறுகிறார்கள்.
''குழந்தைகளிடம் அதிகம் விலகும் பெற்றோர்கள், ஓர் குறைந்த தூண்டுதல் சமூக சூழலை வழங்குகிறார்கள். அது குழந்தையின் அறிவாற்றல் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.'
No comments:
Post a Comment